முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கு மார்ச்-4-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் மறைமுகத் தேர்தலின் போது நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 4-ல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த கடந்த ஜனவரி 11-ம் தேதியன்றும், கடந்த ஜனவரி 22-ம் தேதியன்றும் நடைபெற்ற சாதாரண மறைமுகத் தேர்தலின்போது பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மார்ச் 4-ல் நடத்திட மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி மாவட்ட ஊராட்சித் தலைவர் ஒரு பதவியிடம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஒரு பதவியிடம், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் 11 பதவியிடங்கள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் 18 பதவியிடங்கள், கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவி 70 பதவியிடங்கள் என மொத்தம் 102 இடங்களில் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 4-ம் தேதி முற்பகல் 10 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மார்ச் 4 பிற்பகல் 3 மணிக்கும் தேர்தல் நடைபெறும். இதில் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பார்கள். இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து