மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது - முன்னாள் பாக். கவீரர் அப்ரிடி சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020      விளையாட்டு
afridi 2020 02 25

இஸ்லமாபாத் : மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியாவுடனான உறவு மேம்படாது என்று முன்னாள் பாகிஸ்தான் அதிரடி வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்

இந்தியாவில் மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, அந்நாட்டுடனான உறவு மேம்படாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அப்ரிடியிடம், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் மீண்டும் எப்போது நடக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு பதிலளித்த அப்ரிடி, இந்திய பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.

இது குறித்து அப்ரிடி கூறுகையில், மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. மோடி, சிந்திப்பதை அனைவரும் அறிந்துள்ளோம். எதிர்மறை விஷயங்களை சார்ந்தே அவரது சிந்தனை இருக்கிறது. ஒரே ஒரு நபரால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு சிதைக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்பார்ப்பது இது இல்லை. எல்லையில் இருபுறமும் உள்ள மக்களும், ஒருவருக்கொருவர் நாட்டிற்கு பயணிக்க விரும்புகின்றனர். மோடி என்ன விரும்புகிறார் அவரது திட்டம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து