முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி. தொடரில் நாங்கள் ஷாட் பிட்ச் பந்தில் தடுமாறினோம் - ரகானே

வியாழக்கிழமை, 12 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக ஷாட்பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் மோசமான வீரர் என்று அர்த்தம் கிடையாது என் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரகானே கூறினார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரகானே கூறுகையில்,  ஷாட்பிட்ச் பந்துவீச்சு குறித்து மக்கள் அதிகமாக பேசுகிறார்கள். நியூசிலாந்து தொடரில் நாங்கள் ஷாட்பிட்ச் பந்து வீச்சில் தடுமாறினோம். ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்பதற்காக ஷாட்பிட்ச் பந்தை எதிர்கொள்வதில் மோசமான வீரர் என்று அர்த்தம் கிடையாது. மெல்போர்னில் நடந்த இன்னிங்சை (2018 - ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) பாருங்கள். அதில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். ஷாட்பிட்ச் பந்துகளில் நன்றாக ஆடினோம். குறிப்பாக நான் அதிரடியாக விளையாடினேன். எனவே ஷாட்பிட்ச் பந்துவீச்சு குறித்து ரொம்ப அதிகமாக சிந்திக்க வேண்டியதில்லை.

நியூசிலாந்தில் ஆடும் போது காற்றின் தாக்கம் நிறைய இருந்தது. அத்தகைய சூழலை கச்சிதமாக பயன்படுத்தி நியூசிலாந்து பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். இந்த தொடரில் இருந்து ஒரு அணியாக நிறைய கற்றுக்கொண்டோம். நாங்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன், நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டியது முக்கியம். ஆண்டின் இறுதியில் நடக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்  என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து