முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த விரைவில் தடை: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2026      இந்தியா
social-media

அமராவதி, ஆந்திரப் பிரதேசத்தில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் என்றும், அடுத்த 90 நாள்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தடையை 13 முதல் 16 வயதுடையவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இவ்வாறு, சிறார்களின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் மாநிலங்கள் அதிரடி முடிவை வெளியிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கின்றது. அதேவேளையில், இது போன்ற நடவடிக்கைகள் மாணவர்களுக்குப் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து