முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் சட்டசபை தேர்தலில் 172 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தி.மு.க.

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2026      தமிழகம்      அரசியல்
DMK-Offces 2023 03 31

சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் 172 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் காங் கிரஸ், தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்பட 21 கட்சிகள் உள்ளன. 

தி.மு.க. கூட்டணியில் ஓரிரு நாள்களில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னத்திலும், மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளன.

கடந்த முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 3 தொகுதி களிலும் தோல்வி அடைந்தது. இந்த முறை அக்கட்சிக்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி அடைந்ததால் இந்த முறை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட வில்லை. புதிதாக தி.மு.க. கூட்ட ணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதி கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வட தமிழகத்தில், விடு தலை சிறுத்தைகள் கட்சி மூலம் தலித் வாக்குகளையும், தே.மு.தி.க. மூலம் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட வாக்காளர்கள் மற்றும் பிற்பட்டோர்சமூக வாக்குகளை ஒருங்கி ணைத்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் உத்தியாகும். கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதால் 4 தொகுதிகள் மட்டும் ஒதுக் கப்படும் என தெரிகிறது.

கடந்த முறை தலா 6 தொகுதிகளில் போட்டி யிட்ட இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்டு ஆகியவை தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. எனவே இந்த இரு கட்சிகளுக்கும் தலா 4 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக இணைந்த மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னத்தில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கடந்த முறை உதயசூரியன் சின்னத் தில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதி யில் மட்டுமே வெற்றி பெற்றதால், இந்த முறை 2 தொகுதிகள் மட்டுமே உதயசூரியன் சின்னத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இவை தவிர, மனிதநேய ஜனநாயக பேரவை, கொங்கு இளைஞர்பேரவை, முக்குலத்தோர்புலிப்படை, புதிய திராவிடர்கழகம் உள்ளிட்ட சில சிறு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் 172 தொகுதிகளில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட உள்ளனர். 62 தொகுதிகளில் தனி சின்னத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளதாக தி.மு.க. வட் டாரத்தில் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து