முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரம்பின் முன்னால் பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு தைரியமில்லை: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2026      இந்தியா
Rahul 2024-12-03

டெல்லி, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு முன்னால் பேசுவதற்கு மோடிக்கு தைரியமில்லை என்று ராகுல்காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அனுமதியளிப்பதாக அமெரிக்கா கூறியதைக் குறிப்பிட்டு, "ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அனுமதியளிக்க அமெரிக்கா யார்? இந்தியாவுக்கு ஏன் அமெரிக்காவின் அனுமதி தேவை? கடந்த சில மாதங்களாக, இந்திய நாட்டினர் பெரும் வேதனையுடன் இருந்து வருகின்றனர். அடுத்தடுத்து ட்ரம்ப் முன் நீங்கள் தலை வணங்குகிறீர்கள். 

அவருக்கு முன்னால் பேசுவதற்குகூட உங்களுக்கு தைரியம் இல்லை. ட்ரம்ப் முன்னால் நீங்கள் தலைவணங்க வேண்டியதன் நிர்ப்பந்தம் என்ன? ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமையான நாடு இந்தியா. 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட நாடு இந்தியா. அடுத்தடுத்த துணிச்சலும் வீரமும் மிக்க வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது. 

இதற்கு முன்பு இந்தியா எந்த நாட்டின் முன்பாகவும் தலை வணங்கியதே இல்லை. இந்திய வரலாற்றில் ஒருபோதும் இவ்வளவு பலவீனமான தலைமை இருந்ததில்லை. ட்ரம்ப் ஏதேனும் நிர்ப்பந்தம் செய்கிறார் என்றால், இந்தியா மற்றும் இந்தியர்களின் நலனுக்காக தயவுசெய்து பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். ஆனால், இந்தியாவை இப்படி தலைவணங்க விட வேண்டாம். நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்" என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

மேலும், "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுகிறது. இது அகிம்சை மற்றும் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட நம் வரலாறு, நிலப்பரப்பு மற்றும் ஆன்மிக நெறிமுறைகளில் வேரூன்றியிருக்க வேண்டும். ஆனால், இன்று நாம் காண்பது இந்தியாவின் கொள்கை அல்ல; இது, சமரசம் செய்யப்பட்ட ஒரு தனிப்பட்ட நபரின் சுரண்டலின் விளைவே" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து