ஆஸி.வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா இல்லை : மருத்துவ பரிசோதனையில் உறுதி

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2020      விளையாட்டு
Aus player Richardson 2020 03 13

சிட்னி : ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸன் தொண்டை பிரச்சினை காரணமாக வெளியேறினார். இதனையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அவர் உடனடியாக மருத்துவ சோதனைகள் எடுத்துக் கொண்டார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிட்னி கிரிக்கெட் மைதானத்துக்கு திரும்புவதாக செய்திகள் வந்துள்ளன. நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. கேன் ரிச்சர்ட்ஸனுக்கு கொரோனா என்ற அச்சம் ஏற்பட்டதையடுத்து அவருக்குப் பதிலாக ஷான் அபாட் தேர்வு செய்யப்பட்டார். கேன் ரிச்சர்ட்ஸன் இந்த முறை ஐ.பி.எல். போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு ஆடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து