முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ராவால் எனது தூக்கத்தை இழந்துள்ளேன்: ஆரோன் பிஞ்ச்

ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

துபாய் : 2018-19 டெஸ்ட் தொடரின்போது பும்ரா பந்தை எப்படி எதிர்கொள்வது குறித்து யோசித்து யோசித்து தூக்கத்தை இழந்தேன் என்று ஆரோன் பிஞ்ச் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பிஞ்ச். ஒயிட் பாலில் சிறப்பாக விளையாடும் இவரால், ரெட் பந்தில் (டெஸ்ட் போட்டி) சிறப்பாக விளையாட முடியவில்லை. 2018-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற போட்டியில் அரைசதத்துடன்  டெஸ்டில் அறிமுகம் ஆனார். அதன்பின் 2018-19-ல் இந்தியா ஆஸ்திரேலியா சென்று விளையாடியது. இந்த தொடரை இந்தியா 2-1 என வென்றது.மூன்று டெஸ்டில் ஆரோன் பிஞ்ச் 97 ரன்கள் மட்டுமே அடித்தார். அதன்பிறகு இவரால் டெஸ்ட் போட்டியில் இடம் பெற முடியாமல் போனது. இந்தத் தொடரின்போது பும்ரா பந்தை எப்படி சந்திப்பது என யோசித்து யோசித்து தூக்கத்தை இழந்துள்ளேன் என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில், இந்தத் தொடரில் நான் ரன்கள் அடிக்க திணறினேன். தொடக்க வீரராக களம் இறங்கிய நான், ரன்கள் அடிக்க தொடர்ச்சியாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் இரவு நேரத்தில் எழுந்து, நாளை காலை பும்ரா பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்று நினைப்பேன். அவர் என்னை அவுட்டாக்கியது வேடிக்கையாக இருக்கும். அதேபோல் புவனேஷ்வர் குமார் என்னை அடிக்கடி அவுட்டாக்கியதும் இரவு எழுந்து சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து