Idhayam Matrimony

மானியம் இல்லா சிலிண்டரின் விலை ரூ. 65 வரை குறைப்பு

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் மானியம் இல்லா சிலிண்டரின் விலை ரூ.65 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கான மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மேல், சிலிண்டர்கள் தேவைப்பட்டால் சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி 14.2 கிலோ எடையுடைய மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 61.5 முதல் ரூ. 65 வரை குறைக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 2-வது மாதமாக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட விலையின் படி, டெல்லியில் ரூ. 805-க்கு விற்பனையாகி வரும் சிலிண்டரின் விலை, ஏப்ரல் 1 முதல் ரூ. 744-க்கு விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் ரூ. 826-ல் இருந்து ரூ.761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து