பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ்குமார் நியமனம்

புதன்கிழமை, 3 ஜூன் 2020      இந்தியா
Raveesh Kumar 2020 06 03

Source: provided

புதுடெல்லி : பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

பின்லாந்து நாட்டிற்கான இந்தியத் தூதரக ரவீஷ்குமாரை நியமித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ரவீஷ்குமார் தற்போது இந்திய வெளியுறவுத்துறை இணைச்செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளராக ரவீஷ் குமார் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து