முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் விலக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டெல்லியில் நேற்று முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். 

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  இதனைத் தொடந்து எல்லையில் போர் பதற்றம் உருவானது. பின்னர் இருநாடுகளிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இருநாடுகளும் எல்லையில் குவித்திருந்த படைகளை விலக்க ஒப்புக் கொண்டன. தற்போது லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருநாட்டு ராணுவமும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இருநாடுகளிடையேயான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தொடரவும் உள்ளன. 

இந்தியா -சீனா இடையேயான இருதரப்பு ஒருங்கிணைப்பு- ஆலோசனைக் குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதேபோல் எல்லை நிலவரம் தொடர்பாக முப்படைகளின் தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் முப்படைகளின் கூட்டு தளபதி பிபின் ராவத்தும் பங்கேற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து