முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2025      தமிழகம்
Jail 2025-03-19

Source: provided

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியயை ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுலிகாடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் சனிக்கிழமை அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்து வரும் கரம்பயம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் (53) என்பவர் பாலியல் சீண்டல் செய்த நிலையில், அந்த மாணவி வீட்டுக்கு சென்றவுடன் இதுபற்றி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் சனிக்கிழமை காவல் நிலையத்திற்கு போன் மூலம் புகார் தெரிவித்துவிட்டு, பள்ளி முன்பு மற்ற பள்ளி மாணவ மாணவிகளுடன் அவரவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினரையும் பெற்றோர்கள் முற்றுகையிட்டு அவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த பகுதியில் நீண்ட நேரமாக பதட்டமான சூழ்நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர் பாஸ்கரை நீண்ட நேரத்துக்குப் பிறகு அழைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆசிரியர் பாஸ்கரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். 

மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி, பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு தெரிந்திருந்தும் அதை அவர் மறைத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயா என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து