சர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      விளையாட்டு
Vivo 2020 07 12

Source: provided

சர்ச்சை எழுந்த காரணத்தால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து சீனாவின் விவோ நிறுவனம் வெளியேறியுள்ளது. 

பிசிசிஐ ஐபிஎல் டி20 லீக்கை நடத்தி வருகிறது. 2022 வரை சீன நிறுவனமான விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை பெற்றிருந்தது. இதனால் வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை பிசிசிஐ-க்கு வருமானம் கிடைக்கும். 

லடாக் மோதலுக்குப் பிறகு சீனா பெருட்களையும், சீன நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விவோ தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள் கடும்கோபத்தை வெளிப்படுத்தினர். டுவிட்டரில் ‘BoycottIPL’ என ஹேஸ்டேக் உருவாக்கி எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியுள்ளது. இது பிசிசிஐ-க்கு மிகப்பெரிய அளவில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து