முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர ஓட்டலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு : ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

விஜயவாடா : ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இந்த தீ விபத்தில் பலியானோருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஆந்திர பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத சூழல் காணப்படுகிறது. 

இதனால், அங்கிருக்கும் ஓட்டல்கள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இதேபோன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காகவும் சில ஓட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதுபோன்று விஜயவாடா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றை, தனியார் மருத்துவமனை ஒன்று குத்தகைக்கு எடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக பயன்படுத்தி வந்தது.  அந்த மருத்துவமனையில் திடீரென நேற்று காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 

இதில், 22 பேர் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.  அவர்களை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றும் பணியும் நடந்தது.  மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. 

இந்த தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  இந்நிலையில் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இதேபோன்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சம்பவம் பற்றி அதிர்ச்சி தெரிவித்துள்ளதுடன், வருத்தமும் தெரிவித்து உள்ளார்.  தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி கண்டறிய அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

மீட்பு பணிகளை மேற்கொள்ள அதன் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கூறியதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் உத்தரவிட்டு உள்ளார்.

இதுபற்றி மாநில உள்துறை அமைச்சர் கூறும் பொழுது, தீ விபத்து நடந்த ஓட்டலில் 40 நோயாளிகள் மற்றும் 10 மருத்துவ பணியாளர்கள் இருந்துள்ளனர்.  மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என ஆந்திர பிரதேச அரசு அறிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து