முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2025      உலகம்
trump 2024-12-30

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். புதிய பொறுப்புகளை பலருக்கும் வழங்கி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிக்கான சிறப்பு உதவியாளராக பணியாற்றி வரும் லிண்ட்சே ஹல்லிகனை, விர்ஜீனியா மாகாணத்தின் கிழக்கு மாவட்டத்திற்கான வழக்கறிஞராக நியமித்து ட்ரம்ப் அறிவித்து உள்ளார்.

இதனை ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் ட்ரம்ப் பகிர்ந்து இருக்கிறார். அதில், நீண்டகாலம் என்னுடைய பணியாற்றிய அனுபவம் கொண்ட லிண்ட்சே, கண்டிப்பான, திறன் படைத்த மற்றும் விசுவாசமிக்க வழக்கறிஞர் ஆவார். புளோரிடா மாகாணத்தில் பாம் பீச் பகுதியில் அமைந்துள்ள என்னுடைய வீட்டில் அரசியலமைப்புக்கு எதிராக, ஜோ பைடன் தலைமையிலான இடதுசாரி சிந்தனையுடனான ஜனநாயக கட்சி சோதனையில் ஈடுபட்டபோது, என்னுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் லிண்ட்சே.

அறிவார்ந்த, பயமற்ற மற்றும் அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி மற்றும் உதவி அட்டர்னி ஜெனரல் டாட் பிளாஞ்ச் ஆகியோருடன் ஒன்றாக பணியாற்றியவர். நீங்கள் நீதிக்காகவும், விர்ஜீனியா மாகாணம் மற்றும் நம்முடைய நாட்டுக்காகவும் சிறந்த செயல்களை செய்வீர்கள். லிண்ட்சேவுக்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருவாக்குங்கள் என்றும் அவர் பதிவிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து