எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து முறையிட முடிவு செய்தன.
இதன்படி, நேற்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, எதிர்க்கட்சிகள் சார்பில் குலாம் நபி ஆசாத் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என கோரிக்கை அடங்கிய எதிர்க்கட்சிகளின் மனுவை அளித்தார்.
ஜனாதிபதியை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், வேளாண் மசோதா குறித்த எங்களின் கருத்தை ஜனாதிபதியிடம் கூறினோம்.
வேளாண் மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. வேளாண் மசோதா சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, இந்த மசோதாக்களை ஜனாதிபதி திரும்ப அனுப்ப வேண்டும். டிவிஷன் முறை வாக்கெடுப்போ, குரல் வாக்கெடுப்போ நடத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


