முக்கிய செய்திகள்

சிகிச்சை முடிந்து விஜயகாந்த் இன்று வீடு திரும்புவார்: சுதீஷ்

Vijayakant 2020 09 27

Source: provided

சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் இன்று வீடு திரும்புவார் என சுதிஷ் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 22-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என்று அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதிஷ் தெரிவித்துள்ளார். இதனால், தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து