முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக். 15 முதல் தியேட்டர்கள் திறக்கலாம்: 5-ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24-ம் தேதி இரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பரவல் குறையாததால் அதற்கு பின்னும் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து 4.0 எனப்படும் 4-வது கட்ட ஊரடங்கு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

4-வது கட்ட ஊரடங்கு காலம் நிறைவடைய உள்ள நிலையில் நேற்று 5-ம் கட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறைஅமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, ஐந்தாம் கட்ட தளர்வில் அக்டோபர் 15-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள், மல்டிப்ளக்ஸ் அரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அக்டோபர் 15-ம் தேதிக்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும்.  நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களும் திறக்க அனுமதி அளிக்கப்படும். 

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும். அக்டோபர் 5-ம் தேதி முதல் ஓட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31 வரை பொது முடக்கம் கடுமையாகப் பின்பற்றப்படும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து