காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபனில் இருந்து செரினா வில்லியம்ஸ் விலகல்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      விளையாட்டு
Serena-Williams 2020 09 30

Source: provided

பாரிஸ் : காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபனில் இருந்து அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 11-ம் தேதி வரை நடக்கிறது. மே மாதத்தில் நடக்க இருந்த இந்த போட்டி கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது  நடந்து வருகிறது. 

இந்த நிலையில், பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து  காயம் காரணமாக  விலகுவதாக முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் சகநாட்டவரான கிறிஸ்டி அன்னை எதிா்கொண்டார். 7-6(2), 6-0 என நேர்செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.   

இந்நிலையில் காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து வெளியேறுவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து