காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டு கொலை

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      இந்தியா
KASHMIR 2020 10 19

Source: provided

ஜம்மு : காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய கூட்டு வேட்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். 

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் மெல்ஹோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதில், பயங்கரவாதிகளுக்கும், கூட்டு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், அடையாளம் தெரியாத பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு கொன்றனர் என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து