முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்து பட்டத்து இளவரசர் பஸ்சில் பயணம்

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

துபாய் : துபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து பணிகள் கடந்த ஆண்டு முதல் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இதில் குறிப்பாக உலக கண்காட்சிக்கு அதிக அளவில் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிய உள்ளதால் மெட்ரோ ரெயில் போக்குவரத்து, சாலைகள் விரிவாக்கம், சைக்கிள் பாதைகள், பஸ் போக்குவரத்து ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பஸ் போக்குவரத்தை மேம்படுத்த 17 பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள் மேம்படுத்தப்பட்டு 614 புதிய பஸ்கள் போக்குவரத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாயில் அல் குபைபா என்ற பகுதியில் புதிதாக பெரிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது. தற்போது அதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது.

மொத்தம் 2 ஆயிரத்து 452 சதுர மீட்டர் பரப்பளவில் அலுவலக பகுதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. உள்ளே மொத்தம் 132 பஸ்களை நிறுத்திக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக வெளியில் இருந்து வரும் பஸ்களுக்காக 50 நிறுத்தங்கள், 48 கார் நிறுத்த பகுதிகள், 34 டாக்சிகளுக்கான கார் நிறுத்த பகுதிகள், 60 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் பகுதி, உணவகங்கள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய பேருந்து நிலையமானது சர்வதேச தரத்தில் மிக பிரமாண்டமாக, ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தும் அளவு விசாலமாக கட்டப்பட்டுள்ளது. இதனை துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து அதன் வசதிகளை பட்டத்து இளவரசர் பார்வையிட்டார். இதில் அங்குள்ள பஸ் ஒன்றில் ஏறி அந்த பேருந்து நிலையத்தை சுற்றி வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து