முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியில் நடந்த கொடூரம்: நோயாளிகளை ஊசி போட்டு கொன்ற ஆண் செவிலியர்..!

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      உலகம்
injection

Source: provided

பெர்லின்: ஜெர்மனியில் நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த ஆண் செவிலியரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆண் செவிலியராக  2020-ம் ஆண்டு பணியில் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பணி காலத்தில், நோயாளிகளை பராமரிப்பதற்கு பதிலாக அவர்களை ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். 

இந்த அதிர்ச்சி சம்பவம் 2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2024-ம் ஆண்டு மே வரையில் நடந்துள்ளது. அப்போது, இதுபோன்று 10 நோயாளிகளை கொலை செய்துள்ளார். 27 பேரை கொல்ல முயற்சியும் செய்துள்ளார். இரவு நேர பணியின்போது, பணி சுமை கூடுதலாக இருக்கிறது என உணர்ந்த அவர், இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆச்சன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில், 15 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளியே வர முடியாதபடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், மீண்டும் அவருக்கு எதிராக விசாரணை நடக்கும் என தெரிகிறது. 

2019-ம் ஆண்டில் நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் நர்ஸ் ஒருவர் வடக்கு ஜெர்மனியில் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் நோயாளிகளுக்கு அதிக டோஸ் மருந்துகளை கொடுத்ததில் பலர் உயிரிழந்தனர். ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூர கொலைக்காரர் இவர் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து மற்றொரு கொடூர வழக்கு தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து