முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி: டி.டி.வி. தினகரன் தகவல்

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      தமிழகம்      அரசியல்
TTV 2023 01 20

சென்னை, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி என்று  டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

சென்னையில் அ.ம‌.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தலுக்கு பிறகே நடத்த வேண்டும். சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தள்ளிப்போட வேண்டும்; சாமானிய மக்களுக்கு எஸ்.ஐ.ஆர். படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படும். என்றுமே டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமிக்கு சிம்ம சொப்பனம்தான். 

துரோகத்தை வீழ்த்தாமல் யார் தடுத்தாலும் நான் ஓயமாட்டேன். பன்னீர்செல்வம் துரோகம் செய்தார் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யார் துரோகம் செய்தார்கள் என்பது உலகத்திற்கே தெரியும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று இல்லாமல், கட்சியின் பொதுச்செயலாளராக தான் இருக்க வேண்டும் என்று சுயநலத்தோடு எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் நான் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வண்டவாளங்களின் விவரங்கள் அடங்கிய கோப்புகள் போயஸ் கார்டன் இல்லத்தில் தான் இருந்தன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கோப்புகளை படித்து பார்த்து நானும், மருத்துவர் வெங்கடேசும் கிழித்து எரித்தோம். கோடநாட்டில் தேடப்பட்ட அனைத்து ஆதாரங்களும் போயஸ் கார்டனில் தான் இருந்தன. அந்த ஆதாரங்களை தேடிதான் கோடநாட்டில் கொலைகள் நடந்தன. 

விஜய்யின் வருகையால் 2026 தேர்தலில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்படும். மேலும் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், த.வெ.க. கூட்டணிக்கும் இடையேதான் போட்டி. த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக நான் சொல்லவில்லை. யதார்த்தமாக, சாதாரண குடிமகனாக பதில் சொல்கிறேன். விஜய் தலைமையில் சரியான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டி நிலவும். கூட்டணி குறித்து சில கட்சிகள் என்னை அணுகினார்கள். கூட்டணி குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. வெற்றி கட்சியுடன் தான் எனது கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து