முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம்

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      விளையாட்டு
6-Ram-98

Source: provided

இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கியது. வருகிற 9-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. 35 வயதுக்கும் மேற்பட்டவருக்கான இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர். உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் இந்தப்போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தப்போட்டி முதலில் இந்தோனேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. 3-வது தடவையாக ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 2000, 2006ம் ஆண்டுகளில் பெங்களூருவில் நடைபெற்றது. கடைசியாக 2023-ம் ஆண்டு பிலிப்பைன்சில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் தடகளபோட்டியில் இந்தியா 264 பதக்கங்களை பெற்றது. சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. 

நியூசிலாந்து த்ரில் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் (நவம்பர் 6) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய மார்க் சாப்மேன் 28 பந்துகளில் 78 ரன்கள் விளாசி அசத்தினார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிம் ராபின்சன் 39 ரன்களும், டேரில் மிட்செல் 28 ரன்களும் எடுத்தனர். சாண்ட்னர் 18 ரன்கள் எடுத்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபோர்டி, ஜேசன் ஹோல்டர் மற்றும் ரோமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

ஆர்.சி.பி. அணிக்கு புதிய பயிற்சியாளர்

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் கடந்த 2023-ம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதன் 3-வது சீசன் இந்த வருடம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனையடுத்து 4-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது. 

இதற்கு முன்னதாக அணிகளை வலுப்படுத்தும் முயற்சியில் நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. இதில் முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அடுத்த சீசனுக்கு முன் தங்களது தலைமை பயிற்சியாளரை மாற்றியுள்ளது. அதன்படி புதிய தலைமை பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரரான மலோலன் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மலோலன், கடந்த 6 ஆண்டுகளாக அந்த அணியுடன் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் மகளிர் அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீராங்கனைகளுக்கு கார் பரிசு 

மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 51 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது. இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலக கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.

விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டாடா சியாரா கார், மகளிர் உலக கோப்பை வென்ற ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளுக்கு பரிசாக வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து