Idhayam Matrimony

4-வது டி-20 போட்டி: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா முன்னிலை

வியாழக்கிழமை, 6 நவம்பர் 2025      விளையாட்டு
India 2024-05-11

Source: provided

கராரா: 4-வது டி-20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 

சுற்றுப்பயணம்... 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து, 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

அபிஷேக் - சுப்மன்... 

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டி20 போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் நேற்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 28 ரன்கள் அடித்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிங்கிய சிவம் துபே 22 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 39 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அவுட்டானார்.

167 ரன்கள் குவிப்பு...

அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார 20 ரன்னிலும் திலக் வர்மா 5 ரன்னிலும் ஜித்தேஷ் சர்மா 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி நேரத்தில் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்ததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. அக்சர் பட்டேல் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் எல்லீஸ், ஆடம் சாம்பா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்தியா முன்னிலை...

இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18.2 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 1.2 ஓவர்கள் மட்டுமே பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து