எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் முதல்வரின் வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாநில அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றி ஆலோசனை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அம்மாவின் நல்லாசியுடன் சரித்திரம் போற்றும் சாதனை படைக்கும் வகையில் எளிய முதல்வராய், விண்ணை முட்டும் சாதனை படைத்திட்டு, எட்டரை கோடி மக்கள் நலனே, தன் நலன் என்று சாதனை படைத்திட்ட சாதனை நாயகன், தன் அளப்பறியா உழைப்பால் உலகமே அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த கொடிய கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வந்து இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று பாரத பிரதமர் மூலம் பாராட்டைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் முதல்வர் எடப்பாடியார், இந்த சாதனை திட்டங்களுக்கு துணையாக நின்று துணை முதல்வர் ஓ.பி.எஸ். திகழ்ந்து வருகிறார் என்பதை மாநில அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் பெருமையுடன் சுட்டிகாட்டிகிறது.
இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய முழக்கங்களை தாங்கள் சுவாசிக்கும் மூச்சாக நினைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் முதல்வரும், துணை முதல்வரும் செயலாற்றி வருவதை இந்த நாடு நன்கு அறியும் தென்மாவட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கித் தந்தது மட்டுமல்லாது, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரியை உருவாக்கி தந்தும், மதுரை மாநகர் பகுதிக்கு 1,200 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணியினை தந்திட்டது மட்டுமல்லாது, மதுரை மாவட்டத்திற்கு 30 ஆண்டு கால வளர்ச்சி திட்டங்களையெல்லாம் மூன்றே ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்களை தந்திட்டுள்ளார் நீர் மேலாண்மையில் ஒரு புரட்சியை உருவாக்கும் வகையில் குடிமராமத்து திட்டம் செய்து அதன் மூலம் தமிழகத்தின் நிலத்தடி நீரை உயர் செய்து வாழும கரிகால சோழனாக முதல்வர் திகழ்ந்து வருகிறார்
தொடர்ந்து தென்மாவட்ட மக்களின்,வளர்ச்சிக்காக கிள்ளி கொடுத்தால் போதாது என்று அள்ளி அள்ளி வழங்கி வரும் முதல்வர் இரண்டு நாள் பயணமாக தென்மாவட்ட மக்களை நேரில் சந்திக்கிறார். 29-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணி நடவடிக்கை ஆய்வு கூட்டங்களை மேற்கொண்டு மக்களுக்கு ஆறுதல் கூறி பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்கிறார் முதல்வர்.
அதனை தொடர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் மதுரை, மாவட்டத்திற்கு வருகை தந்து பசும்பொன் தேவர் திருமகனார் குருபூஜையில் பங்கேற்க வருகின்ற 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்று மரியாதை செலுத்துகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தென் மாவட்ட மக்களின் நன்றியை உரிதாக்கும் வகையிலும், இந்தியாவிலேயே தமிழகத்திற்கு அதிக முதலீட்டை ஈர்த்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாகி தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பாரதப் பிரதமர் மூலம் பாராட்டைப் பெற்று அதன் மூலம் தமிழகத்திற்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மாநில அம்மா பேரவையின் சார்பிலும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சாதனைத் திட்டங்களை முன்னிறுத்தி வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி வாகை சூடிடும் என்று எதிர்க்கட்சிகளே புறமுதுகிட்டு ஓடிடும் வகையில் வகையில் மாபெரும் நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது,
தமிழகம் ஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது என்று நடிகர் கமல் கருத்து கூறியுள்ளார். வல்லரசு நாடுகள் கூட வெள்ளத்தில் தவித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன் கூட்டியே ஆலோசனை கூட்டத்தை நடத்தி அதில் வெள்ளம் வரும் முன், வெள்ளம் வரும்போதும் , வெள்ளம் நீர் வடிந்த பின்பு என்று மூன்று நிலைகளைப் பிரித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். மேலும் நீர் தேங்கும் பகுதிகளில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காணொலி முலம் அறிக்கை வெளியிடுவதை விட களத்தில் வந்து பார்க்கவேண்டும். அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார். தற்போதைய ஆட்சியில் நீர்நிலைகள் மிகச்சிறப்பாக தூர்வாரப்பட்டு உள்ளன. எதிரிகள் எல்லாம் குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்பது போல வடகிழக்குப் பருவ மழையிலும் மீன் பிடிக்கலாம் என நினைக்கிறார்கள்.
தேர்தல் காலம் என்பதால் அரசை எப்படியாவது எந்த வகையிலாவது குறை சொல்ல வேண்டும் என குறை கூறுகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுநரிடம் இருந்து நல்ல பதில் வரும் என காத்திருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றனர். எந்த வேலையும் செய்யாமல் பங்களிப்பில் எங்களுக்கும் உள்ளது என்று தி.மு.க. செய்து வருகின்றனர். பெற்ற பிள்ளைக்கு தான் பெயர் வைக்க முடியும். பெறாத பிள்ளைக்கு எப்படி பெயர் வைக்க முடியும். அப்படித்தான் தி.மு.க.வின் நிலைப்பாடாகும்
அதிமுக அரசு மீது மாணவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. டி.ஜி.பி. விவகாரத்தில் நிர்வாக வசதிக்காக எடுக்கப்படும் காரணங்களை விமர்சனம் செய்யக்கூடாது. வாரிசு என்ற அடையாள அட்டையை கொண்டு அ.தி.மு.க.வில் பதவி தருவது கிடையாது.
அதிகமான இளைஞர்களை சட்டப்பேரவையில் கொண்டது அ.தி.மு.க. மட்டுமே, இளைஞர்களுக்கு அட்சய பாத்திரம் போல் அள்ளி அள்ளி வாய்ப்புகளை தருகிற ஒரே இயக்கமாக உள்ளது. அம்மாவிற்கு பிறகு அ.தி.மு.க. எஃகு கோட்டையாக உள்ளது. கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை. நடிகர் விஜய் எல்லாம் மாவட்ட நிர்வாகிகளையும் சந்திக்க உரிமையுள்ளது. அவர் இயக்கம் சார்ந்த நிர்வாகிகளை சந்திப்பது விவாதிப்பதற்கு உரியது அல்ல,
நடிகர் விஜய் நிர்வாகிகளை சந்திப்பதில் அதைத் தாண்டி யோசிப்பதற்கு ஒன்றுமில்லை, பத்தாண்டு காலமாக கோட்டை பக்கம் வராமல் அதிகார பசியோடு தி.மு.க.வினர் உள்ளனர் எனவும் திமுகவின் காட்டு தர்பார் குடும்ப அதிகார மையம் அதிகார குறுக்கீடு அதிகார துஷ்பிரயோகம் நில அபகரிப்பு சட்டம் ஒழுங்கு சீரழிவு மின்தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் மக்கள் மனதில் பசுமையாக உள்ளது. வருகின்ற 29 மற்றும் 30 தேதிகளில் தென் தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு வருகை தர உள்ளார் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் 375 பொருட்களின் விலை மேலும் குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
20 Sep 2025கோவில்பட்டி, ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி.
-
சாலை விபத்தில் ஆசிரியை பலி: குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
20 Sep 2025விழுப்புரம், விழுப்புரத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் : மத்திய அரசு கருத்து
21 Sep 2025புதுடெல்லி : எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
-
தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு: வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்
21 Sep 2025திருவனந்தபுரம் : தனக்கு தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.