முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா-இந்தியா ஒன்றிணைந்து செயல்பட மைக் பாம்பியோ வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டின் பாதுகாப்புக்கு சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பருடன்  அமெரிக்க யலாளர் மைக் வெளியுறவுத்துறை செ பாம்பியோ இந்தியா வந்து உள்ளார். 

பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு சீனா முன்வைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ  இந்தியத் தலைவர்களுடான பேச்சுவார்த்தைக்கு முன் கூறினார். 

இந்திய வெளியுறவு அமைச்சர்  ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடனான பேச்சு வார்த்தைக்கு முன் பேசிய பாம்பியோ கூறியதாவது:- 

நம்மைப் போன்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் நெருக்கமாக வளர  ஒரு புதிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. நிச்சயமாக இன்னும் பல வேலைகள் நடைபெற உள்ளன.

உகானில் தோன்றிய தொற்றுநோய்க்கான எங்கள் ஒத்துழைப்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் துணை நிற்கும் என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து