10, பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத்துறை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      தமிழகம்
10 -plus-2-results 2020 10

Source: provided

சென்னை : 11-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை 29-ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ,முடிவுகள் வெளியாகும்.

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு நவ. 3,4 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். 10, பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் தமிழகத்தில் 12 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்து தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை மதிப்பிட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே 12,11 மற்றும் 10-ம் வகுப்பில் தோல்வியடந்தவர்களுக்கான துணைத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்நிலையில் 12, மற்றும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு எழுதியவர்கள், தங்கள் முடிவுகளை மதிப்பெண் சான்றிதழாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியாகும். விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை 29-ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து