முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      இந்தியா
amitsha

கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர்  அமித்ஷா  வருகிறார்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா, விமானம் மூலம் வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவை வருகிறார். அன்று இரவு கோவை அவினாசி ரோடு நவ இந்தியா அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

கோவை பீளமேட்டில்25 சென்ட் பரப்பளவில் 12 ஆயிரம் சதுரஅடியில் கட்டப்பட்டுள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தை 26-ந்தேதி காலை 10.30 மணிக்கு அமித்ஷா திறந்து வைக்கிறார். இதையடுத்து பகல் 1 மணிக்கு பா.ஜனதா மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்கிறார். மாலை 5.30 மணிக்கு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். இரவு 8 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். கோவை வரும் அமித்ஷாவுக்கு பா.ஜனதா சார்பில் விமான நிலையம் மற்றும் கட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அமித்ஷா வருகையையொட்டி கோவை மாவட்ட மற்றும் மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து