அமெரிக்காவை அதிரவைக்கும் கொரோனா : ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

புதன்கிழமை, 25 நவம்பர் 2020      உலகம்
America 2020 11 25

Source: provided

வாஷிங்டன் : உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அந்த நாடு தத்தளித்து வருகிறது. 

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. 

கடந்த இரு வாரங்களாக தினமும் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

மேலும் கொரோனாவால் 1.65 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியை நெருங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து 76 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து