அரசியல் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2020      சினிமா
Rajini 2020 11 25

Source: provided

சென்னை : நடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை நடக்கும் மண்டபத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தன் அரசியல் பிரவேசம் குறித்து, இறுதி முடிவை அறிவிக்காத ரஜினி, இன்று தன் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.  இதற்காக, அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை, 9:00 மணிக்கு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்கும் ரஜினி, அதன்பின், தன் அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மன்றம் சார்பில் கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 50 பேர் பங்ககேற்க உள்ளனர். மாஸ்க் அணியவும் ,சமூக இடைவெளியை பின்பற்றவும், அறிவுறுத்தியுள்ளோம். தமிழக அரசின் வழிகாட்டுதலையும் பின்பற்றுகிறோம். உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து