எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் புயல் குறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. அரசின் அறிவுரைகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் வரும் 4-ம் தேதி வரை பெரும் மழையும், புயலும் வீசக்கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கன்னியாகுமரியில் இருந்து கிழக்கே 930 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்றும், டிசம்பர் 3-ம் தேதி காலை குமரிக்கடல் பகுதிக்கு வரும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, 1.12.2020 முதல் 4.12.2020 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் மற்றும் இதர மாவட்டங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் கன மழை பெய்யக் கூடும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஏற்கனவே, 18.9.2020 அன்று தலைமைச் செயலாளர் தலைமையிலும், 12.10.2020 மற்றும் 23.11.2020 ஆகிய இரு தினங்களில் எனது தலைமையிலும், 21.10.2020 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தலைமையிலும், விரிவான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன. கடந்த 23.11.2020 அன்று “நிவர்” புயல் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டேன். மேலும், 24.11.2020 அன்று எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவரச கால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டு, “நிவர்” புயல் தொடர்பான நிலவரங்களை நேரடியாக அறிந்து தேவையான அறிவுரைகளை வழங்கினேன்.
இத்தகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவும், அமைச்சர் பெருமக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரின் சீரிய கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள், கள நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து அதற்கு ஏற்ப வழங்கப்பட்ட குறிப்பான அறிவுரைகள் மற்றும் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக “நிவர்” புயலினால் ஏற்பட இருந்த அதிகப்படியான பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறைக்கப்பட்டன. இதனைக் கருத்தில் கொண்டு பின்வரும் அறிவுரைகள் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.
வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், 1.12.2020 அன்று மாலையிலிருந்து போதுமான எரிபொருளுடன் ஜே.சி.பி. மற்றும் லாரி, மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின் கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாக கூடிய பகுதிகளில் முகாமிட வேண்டும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், மற்றும் விருதுநகர் ஆகியமாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கு கூடுதலாக 1,000 பணியாளர்களையும், கூடுதல் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை பிற மாவட்டங்களிலிருந்து பெற்று தயார் நிலையில் வைக்க வேண்டும். தென் தமிழக கடற்கரையோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும் என்பதால், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள், கன்னியாகுமரி (2), திருநெல்வேலி (3), தூத்துக்குடி (2) மற்றும் மதுரை (2) மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. நீர் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் இருக்க தேவையான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். அவ்விடங்களில் கண்காணிக்க காவல்துறை / வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும். மேலும், தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு, மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தேவையான எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், உணவு தயாரிக்க சமையலர்கள், பொதுமக்களுக்கு தேவையான பாய் மற்றும் போர்வை போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா மற்றும் இதர தொற்று ஏற்படா வண்ணம், அனைத்து நிவாரண முகாம்களிலும் கிருமி நாசினிகள், முகக்கவசங்கள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்கவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், சுகாதாரக் குழுக்கள் அமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.
கடலோர கிராமங்களில் மீனவர்களின் வாழ்வாதாரங்களான கட்டு மரங்கள், மின் மோட்டார் பொருத்திய படகுகள், மீன் வலைகள் ஆகியவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர் தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற, பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நோய்த் தொற்று பரவாமல் இருக்க உடனுக்குடன் திடக்கழிவுகளை அகற்றி, தேவையான கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அதற்கு தேவையான அளவுக்கு கிருமி நாசினி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீரேற்றம் செய்து முழுமையாக தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
தேவைக்கேற்ப ஜெனரேட்டர் வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும். நீர்நிலைகளின் நீர் கொள்ளளவு, பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து ஏரிகள் மற்றும் நீர்நிலைகளையும் கள ஆய்வு மேற்கொண்டு கரை உடைப்புகள் இல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். உடைப்பு ஏற்பட்டால், உடனடியாக சரிசெய்ய போதுமான மணல் மூட்டைகள் உட்பட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். மழை நீர் கால்வாய்கள் மற்றும் பாலங்கள் அடைப்புகளின்றி உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துப் பொருட்கள், பசுந்தீவனங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். நடமாடும் தொலைத் தொடர்பு கருவிகளை தயார் நிலையில் வைத்து, தொலைத் தொடர்பு பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.
வங்ககடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. வரும் 4-ம் தேதி வரை பெரும் மழையும், புயலும் வீசக்கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது, ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீன்பிடி படகுகளின் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அண்டை மாநிலத்தின் கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள், அந்தந்த மாநிலங்களின் கரையை அடைய அனுமதிக்குமாறு, தொடர்புடைய மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. பொது மக்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், வீடுகளில் மின்சாதனப் பொருட்களை கவனமாக கையாள அறிவுறுத்தப்படுகின்றனர். பலத்த காற்று வீசும் போது பொருட்கள் நகரவும், மரங்கள் விழவும் வாய்ப்புள்ளதால் அச்சமயங்களில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரபூர்வ மற்றும் நம்பத்தகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்குமாறும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவை தவிர TN-SMART, TWITTER - TNSDMA மற்றும் அலைபேசி மூலமாகவும் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்திகள் அனுப்பப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் புயல் குறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. அரசின் அறிவுரைகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.