சென்னை : நடிகை ஜெயசித்ராவின் கணவரும், இசையமைப்பாளர் அம்ரிஷின் தந்தையுமான கணேஷ், திருச்சியில் நேற்று காலமானார்.
ஜெயசித்ரா 1983-ல் கணேசை திருமணம் செய்தார். இவர்களுடைய மகன் அம்ரிஷ், இப்போது தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக உள்ளார். கணேஷ் திருச்சியில் தங்கி இருந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்.
அவரது உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மங்கள நாயகன் என்ற தமிழ்ப்படத்தை தயாரித்து, அதில் நாயகனாகவும் நடித்திருந்தவர் கணேஷ். இயக்குனர் அப்சரா ரகுநாதன் அவரை திரைக்கு அறிமுகப்படுத்தினார்.