கோவை - கோவை கரியாம்பாளையத்தில், சுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்தினார்.
கோவை அன்னூருக்கு தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்னூர் தெற்கு ஒன்றியம் கரியாம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அருகில் இருந்த ஏ.டி காலனி பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளி மலரவன்(46) என்பவரது வீட்டில் தேநீர் அருந்தினார்.
அப்போது முதல்வர் அவர்களது குடும்பத்தினரிடம் உரையாடினார். மலரவன் அ.தி.மு.க.வில் எந்த பதவியிலும் இல்லை, இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர். சகுந்தலா கூலி வேலைக்கு சென்று வருகின்றார்.
அவரது மகன் தினேஷ் பவுண்டரிக்கு வேலைக்கு சென்று வருகின்றார். இந்த நிகழ்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அமுல் கந்தசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.சாய்செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர். எதிர்பாராத இந்த நிகழ்வால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.