முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      தமிழகம்
Nayanar-Nagendran 2023-11-1

சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து புறநகர் இரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்புதிய தடத்தால், ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, ரூ.157 கோடி கூடுதல் வருவாய் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து தமிழகத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தி வளர்ச்சிக்குத் தொடர்ந்து வித்திடும் நமது பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து