முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலே டெஸ்ட்: 126 ரன்னில் சுருண்டது இலங்கை 164 இலக்கை நோக்கி இங்கிலாந்து

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

காலே.ஜன.26. இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இலங்கை. மேத்யூஸ் சதம் அடிக்க இலங்கை அணி 381 ரன்கள் குவித்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (186) அபார பேட்டிங்கால் 344 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் லசித் எம்புல்டேனியா 7 விக்கெட் சாய்த்தார்.

37 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 126 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ், ஜேக் லீச் தலா 4 விக்கெட்டும, ஜோ ரூட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் 163 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.  164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. 84 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து