புதுடெல்லி : எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியதாவது,
எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல. யாராவது காயமடைந்தால் அது நாட்டுக்கும் சேதம். நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.