முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2025      தமிழகம்
CM-3-2025-10-29

Source: provided

சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.10.2025) தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மு.சுமதியிடம் வீட்டிற்கான சாவியினை வழங்கினார். 

நாட்டிலேயே முதன்முறையாக ஊரகப் பகுதிகளில் ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் குடிசைகளுக்குப் மாற்றாக நிரந்தர வீடுகள் கட்டித்தரும் முன்னோடித் திட்டம் கலைஞரால் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எய்திடும் வகையில் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 'குடிசையில்லா தமிழ்நாடு" என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் 6 வருடங்களில் 8 லட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நிலையான கான்கிரீட் மேற்கூரையுடன் கூடிய சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஊரக ஏழைக் குடும்பங்களின் கனவினை நிறைவேற்றும் வண்ணம் இத்திட்டம் அறிவிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிலேயே ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டது. கணக்கெடுப்பின் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்ட பயனாளிகளின் தகுதித்தன்மையை உறுதி செய்து அப்பயனாளிகளுக்கு இத்திட்டதின் கீழ் வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மேற்கண்ட கணக்கெடுப்பில் இடம் பெற்று வீடு கட்டுவதற்கு நிலம் இல்லாத பயனாளிகளுக்கு பட்டா வழங்கியும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கியும் வீடற்ற, நிலமற்ற பயனாளிகளின் கனவை இத்திட்டம் நிறைவேற்றியுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான நோக்கம் மற்றும் திட்டத்தின் பயன்கள் விரைந்து மக்களை சென்றடையும் பொருட்டு “பயனாளிகள் தேர்வு செய்தல் முதல் தொகை விடுவித்தல்” வரையிலான அனைத்து நடைமுறைகளும் இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்டதால் தகுதியான பயனாளிகள் வீட்டினை விரைந்து கட்டி முடித்திட சாத்தியமானது. தமிழ்நாடு அரசு இதற்காக முனைப்புடன் செயல்பட்டதால் இத்திட்டம் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் 2024-25 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் ரூ.3500 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்ட ஓராண்டிற்குள்ளேயே ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் பொருட்டு இன்றையதினம் தென்காசியில் நடைபெற்ற அரசின் விழாவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மு.சுமதியிடம் வீட்டிற்கான சாவியினை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து