எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. 9 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் மந்தன் 2021 நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசுகையில், மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று 384 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இதேபோன்று, பாதுகாப்பு உற்பத்தி துறையில் புதியதாக நுழையும் ஸ்டார்-அப் நிறுவனங்களுக்கு கூடுதலான ஊக்குவிப்பு தேவையென்பதை உணர்ந்து அரசு செயல்படுகிறது. ஏரோ இந்தியா கண்காட்சியில் 45 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 203 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது.
கடந்த 2015-2020 ஆகிய 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது. நம்முடைய உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி வருகிற 2025-ம் ஆண்டுக்குள், 2,500 கோடி அமெரிக்க டாலராகவும், அவற்றின் ஏற்றுமதி 500 கோடி அமெரிக்க டாலராகவும் இலக்குகளை கொண்டுள்ளது. இவற்றை நாம் அடைந்து விட்டால், ஏவுகணை, ராணுவ விமானம், வர்த்தக விமானம் உள்ளிட்ட வான்வெளி துறை முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் நம்முடைய பொருளாதாரம் மேம்பாடு அடைய போகிறது. இந்தியாவின் சுயாட்சி தன்மையை பராமரிப்பதில் பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தியில் தற்சார்புடன் திகழ்வது முக்கிய காரணியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


