உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர்

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      விளையாட்டு
Cricket-ground 2021 02 24

Source: provided

அகமதாபாத் : உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு 'நரேந்திர மோடி மைதானம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியம் தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே  மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கு நடைபெற உள்ளது. இந்த ஸ்டேடியத்தை, நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

63 ஏக்கர்களில் பரந்து விரிந்துள்ள இந்த அரங்கத்தில், ஒரே நேரத்தில் 1 லட்சத்து10 ஆயிரம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். 800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், இந்த அரங்கத்தை கட்டி முடித்துள்ளது.

உலகின் மிகச்சிறந்த மற்றும் பெரிய கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள நிலையில், அந்த பெயரை இனி, மோட்டேரா மைதானம் பெற்றுள்ளது. இந்த நிலையில் மோட்டேரா எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த அரங்கம், நரேந்திர மோடி விளையாட்டரங்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து