அகமதாபாத் 3-வது டெஸ்ட் : அக்சர் படேல் - அஷ்வின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி 112 ரன்களில் சுருண்டது

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      விளையாட்டு
Akshar-Patel--Ashwin 2021 0

Source: provided

அகமதாபாத் : அகமதாபாத் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணியின் அக்சர் படேல்  - அஷ்வினின் அபார பந்து சிக்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களில் சுருண்டது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றன. இந்த சூழலில் இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று முதல் தொடங்கி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.   3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இதில் பிங்க் நிற பந்து கொண்ட டெஸ்ட் போட்டியாக இது நடக்கிறது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  தொடக்க வீரர் டாம் சிப்லியும் பேர்ஸ்டோவும் ரன் எதுவும் எடுக்காமல் முறையே இஷாந்த் சர்மா மற்றும் அக்ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு வந்த ஜோ ரூட் 17 ரன்களில்  அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  நன்கு விளையாடி வந்த கிராவ்லியை 53 ரன்களில்  அக்ஷர் படேல் வீழ்த்தினார். அபாயகரமான பேட்ஸ்மேன் பென்ஸ்டோக்ஸ் 12 ரன்களில் அக்ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். 

அக்சர், அஷ்வின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி 48.4- ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.  இதையடுத்து,இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி குவித்த குறைந்தபட்ச ரன்களின் பட்டியலில் இந்த ஸ்கோர் அடங்கியுள்ளது. முன்னதாக கடந்த 1971இல் ஓவலில் 101 ரன்களுக்கும், 1979 - 80இல் மும்பையில் 102 ரன்களுக்கும், 1986இல் லீட்ஸில் 128 ரன்களையும் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்து ஆல் அவுட்டாகி உள்ளது. அதாவது மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து