முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திர மோடியை இந்திய உடையில் வரவேற்ற நெதன்யாகு

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2026      உலகம்
PM-2026-02-26

டெல் அவிவ், இந்திய பாரம்பரிய உடையணிந்து மோடியை வரவேற்று அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அதுபற்றிய நெதன்யாகுவின் இந்தி ட்வீட் கூடுதல் சிறப்பு.

தொடர்ந்து நெதன்யாகு ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வந்தார். அப்போது அவரை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் இந்திய பாரம்பரிய உடையணிந்திருந்தார். இது மோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நெதன்யாகுவின் இந்த செய்கையானது இந்தியா - இஸ்ரேல் இடையேயான வலுவான பங்களிப்பை உறுதிப்படுத்துவதோடு, இருநாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, ராஜாங்க உறவுகளைப் பிரதிபலிப்பதாகவும், மோடி - நெதன்யாகுவின் தனிப்பட்ட பிணைப்பை உறுதிப்படுத்துவதாகவும் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

முன்னதாக, இந்திய உடையணிந்தது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில், “எங்களது விருந்து நிகழ்ச்சிக்கு முன்னதாக நான் எனது நண்பர் பிரதமர் மோடியை இந்திய பாரம்பரிய உடையணிந்து ஆச்சர்யப்படுத்தினேன்,” என்று இந்தியில் ட்வீட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “அருமை! இந்திய உடைகள் மீதான தங்களுடைய அன்பு, எங்களது நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் மரபுகள் மீதான தங்கள் மரியாதையை பிரதிபலிக்கிறது,” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து