Idhayam Matrimony

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்: கோவையில் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என, பிரதமர் மோடியிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். 

மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று (பிப். 25) மதியம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். 

இவ்விழாவுக்கு தலைமை வகித்து முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க கோவை மாநகருக்கு வருகை தந்துள்ள பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மக்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று காலத்திலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்தது. முதலீடுகளை ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில் முதல் மாநிலம் என்ற நிலையை தமிழகம் பெற்றுள்ளது. குடிமராமத்து திட்டம், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் போன்ற பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தி நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

ரூ.934 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் மூலம் முழுமையான நீர்ப்பாசன பகுதிகளுக்கும், கடைமடை வரை நீர் சென்றடைவதை உறுதி செய்யவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டதை செயல்படுத்துவதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 401 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் நவீனப்படுத்தப்பட்டு 2 லட்சத்து 47 ஆயிரத்து 247 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இந்த திட்டத்திற்கான நிதியையும் தமிழகத்தின் இதர நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிதியையும் ஒதுக்கீடு செய்திடுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். 

கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்திடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நவாமி கங்கை திட்டத்தைப் போன்று காவிரி கிளை நதிகள் புனரமைக்கப்பட வேண்டும் என்றும் அந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.  தொழில் வளர்ச்சியை மேம்படுத்த புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 48.45 சதவீத மக்கள் நகர பகுதியில் வசிக்கின்றனர்.  மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதம் அடிப்படையில் கூட்டு திட்டமாக செயல்படுத்திட கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திடுமாறும், சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களிலிருந்து இரவு நேர விமானங்களை இயக்க ஒப்புதல் அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.  மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களின் விரிவாக்கம் நடைபெறும் என்று எதிர்பாக்கப்படுகிறது. கோவையிலிருந்து துபாய்-க்கு நேரடி விமானங்களை இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து