முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      தமிழகம்
Train 2025-10-18

சென்னை, சென்னையில் ரயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்  உயிரிழந்தார்.

திருவேற்காடு, சுந்தரசோழபுரம், தனியார் குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (வயது 60). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இவரது மனைவி செல்வி(58). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக பாபு, உடல்நிலை சரியில்லாமல் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டில் இருந்து வெளி்யே சென்ற பாபு அதன் பிறகு மாயமானார். இந்த நிலையில் ஆவடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற பாபு, அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து