முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்: 400 விக்கெட்டுகள் வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தல்

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 400 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் 4-வதாக இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் கும்ப்ளே, கபில் தேவ் மற்றும் ஹர்பஜன் சிங்குக்கு அடுத்தபடியாக 400 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய நான்காவது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல் கல்லை அவர் எட்டியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.

அதோடு முரளிதரனுக்கு அடுத்தபடியாக குறைந்த டெஸ்ட் போட்டிகளில் (77 போட்டிகள்) மட்டுமே விளையாடி 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையும் அஸ்வின் படித்துள்ளார். ஹாட்லி, ஸ்டெய்ன் (80 போட்டிகளிலும்), ஹெராத் (84 போட்டிகளிலும்), கும்ப்ளே (85 போட்டிகளிலும்) 400வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துளள்னர்.

இந்தியாவுக்காக கும்ப்ளே (619 விக்கெட்டுகளும்), கபில் தேவ் (434 விக்கெட்டுகளும்), ஹர்பஜன் (417 விக்கெட்டுகளும்) வீழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக அஸ்வின் இணைந்துள்ளார். அஷ்வினை முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கரும் தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து