முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மீது முறைபடுத்தப்பட்ட தாக்குதல் நடக்கிறது: தூத்துக்குடியில் ராகுல் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

தூத்துக்குடி : தேர்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் சுதந்திரமான பத்திரிக்கைகள் மீது கடந்த 6 ஆண்டுகளாக முறைப்படுத்தப்பட்ட தாக்குதல் நடைபெற்று வருவதாக தூத்துக்குடியில் ராகுல்காந்தி தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை  தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தமிழகத்தில் தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே நிறைவு செய்துள்ளார். 

முதல்கட்ட பிரசாரத்தில் அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

தற்போது அவர் தமிழகத்தில் தனது 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். இதற்காக அவர் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றும் ராகுல்காந்தி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். மார்ச் 1-ம் தேதி குமரி மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில்,  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அந்நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, நாட்டை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் சுதந்திரமான கடந்த 6 ஆண்டுகளாக முறைப்படுத்தப்பட்ட தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஜனநாயகம் உடனடியாக உயிரிழக்காது. அது மெதுவாக உயிரிழக்கும். அமைப்புகளின் சமநிலையை ஆர்.எஸ்.எஸ் அழித்து விட்டது. 

நீதித்துறை மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் முழு ஆதரவு அளிக்கிறேன். அனைத்து துறையிலும் இந்திய ஆண்கள் தங்களை தாங்கள் எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ அதே கண்ணோட்டத்தில் இந்திய பெண்களையும் பார்க்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து