முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது.

முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்த ஆமதாபாத் ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை 112 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, ஜோ ரூட் 5 விக்கெட்டுகள் எடுத்து அற்புதமாகப் பந்துவீசியதால் முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு வீழ்ந்தது. 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 81 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, 49 ரன்கள் வெற்றி இலக்கை 2-ஆம் நாளிலேயே எட்டி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. 11 விக்கெட்டுகள் எடுத்த அக்ஸா் படேல் ஆட்டநாயகன் ஆனாா். 

மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், மார்ச் 4 அன்று ஆமதாபாத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் 4-வது டெஸ்டிலிருந்து சொந்தக் காரணங்களுக்காக பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதையடுத்து 4-வது டெஸ்டில் இந்திய அணியில் உமேஷ் யாதவ் அல்லது சிராஜ் என இருவரில் ஒருவர் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது. 3-வது டெஸ்டில் பும்ரா மொத்தமாக 6 ஓவர்கள் மட்டுமே வீசினார். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலிருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதம் புணேவில் நடைபெறவுள்ள 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பும்ரா பங்கேற்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து