முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் ட்ரம்ப் அரசுக்கு பதிலடி: அமெரிக்கர்கள் மீது பயணத்தடை விதித்தது 2 ஆப்பிரிக்க நாடுகள்...!

புதன்கிழமை, 31 டிசம்பர் 2025      உலகம்
African-countries-2025-12-3

மாலி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய 2 நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி மற்றும் புர்கினா ஃபஸோ உள்பட 20-க்கும் அதிகமான நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து கடந்த டிச.16 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் விதித்த உத்தரவுக்கு பரஸ்பர நடவடிக்கையாக, மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தங்களது நாடுகளுக்குள் அமெரிக்கர்கள் நுழைய அனுமதி இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மாலியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரஸ்பர கொள்கைகளின் அடிப்படையில் மாலி குடிமக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள அதே தடைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் அமெரிக்கக் குடிமக்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புர்கினா ஃபஸோவின் வெளியுறவு அமைச்சர் கராமகோ ஜீன் - மேரி தரோரே கையெழுத்திட்ட அறிக்கையில், அமெரிக்கக் குடிமக்கள் மீது தடை விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி அமைந்த மாலி மற்றும் புர்கினா ஃபஸோ அரசுகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து