தி.மு.க. கூட்டணியில் வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு: ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      தமிழகம்
velmurugan-2021-03-08

தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி துக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன்  தி.மு.க. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி முதல் பேச்சுவார்த்தையை தொடங்கியது. நேற்று சென்னை அண்ணா அறிவாலாயத்தில் தி.மு.க. - தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக  பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தி.மு.க.வுடன்  தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க.  தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், மு.க.ஸ்டாலின்- தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கையெழுத்திட்டனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து