தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

Gold-price 2020-11-10

தங்கத்தின் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.33,680 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அண்மைக்காலமாக தங்கம் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் திடீரென ஒரேநாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் நேற்று திடீரென குறைந்து இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4250 க்கு விற்ற நிலையில் நேற்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் ரூ. 34,000 க்கு விற்ற ஒரு சவரன் ஆபரணத் தங்கம், நேற்று ரூ.320 குறைந்து ரூ. 33,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தூய தங்கம் 4601 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 36,808 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 4641 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிராம் வெள்ளி 71.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 73.20 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து